
தமிழகத்தில் சென்னை, கோவையில் அதிக கரோனா பாதிப்பு
தமிழகத்தில் அதிக அளவாக சென்னை மற்றும் கோவையில் அதிக அளவில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.
சென்னையில் புதிதாக 209 பேருக்கும், கோவையில் 206 பேருக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சென்னையில் கரோனா பாதிப்பு 205-ஆக இருந்தது. கடந்த மாதம் 27-ம் தேதி 139-ஆக இருந்த நிலையில், தற்போது 209-ஆக பதிவாகியுள்ளது.
சென்னையில் புதிதாக 229 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 3 பேர் உயிரிழந்தனர்.
படிக்க | தமிழகத்தில் மேலும் 1804 பேருக்கு கரோனா தொற்று
பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 2,380 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இதுவரை மொத்தமாக 5,41,616 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் 0.8 சதவிகிதமாக உள்ளது.
சென்னை கோவைக்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 167 பேருக்கும், தஞ்சாவூரில் 121 பேருக்கும், சேலத்தில் 117 பேருக்கும், செங்கல்பட்டில் 110 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது.