5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழகத்தில் செப். 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பின்பற்றப்பட வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஆகஸ்ட் 2021, 2:37 pm IST

தமிழகத்தில் செப். 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பின்பற்றப்பட வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில், கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பல்வேறு தரப்பினரிடையே ஆலோசனை மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் செப்டம்பர் 1ஆம் தேதி 9 முதல் 12 வகுப்பு வரை 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகளை திறக்க உத்தேச தேதியை தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

  • அனைத்து பள்ளிகளிலும் கிருமி நாசினி மற்றும் கைகழுவ தண்ணீர் உள்ளிட்டவை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்
  • கரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க கூடாது
  • மாணவர்களுக்கு சத்து மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையானவை வழங்க வேண்டும்
  • கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியான மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்
  • ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்
  • பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளாட்சி நிர்வாகம் உறுதி செய்யவேண்டும்
  • பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன், கழிவறைகள், அனைத்து வகுப்பறைகள், நூலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்
  • பள்ளி வாகனங்களை கிளம்புவதற்கு முன்பாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
  • பள்ளிகளில் ஒவ்வொரு இருக்கைக்கும் நடுவே குறைந்தது 6 அடி இடைவெளி இருக்க வேண்டும்
  • ஆசிரியர்கள் அறை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்
  • பள்ளியின் கழிவறைக்கு வெளியே, கைக்கழுவுமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி வட்டம் போடப்பட்டிருக்க வேண்டும்
  • பள்ளிகளில் விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும்
  • கட்டுப்பாட்டு பகுதிக்குள் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வர அனுமதி இல்லை 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.