பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி: ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி: ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு
பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் திறக்க அனுமதி: ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு


சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்கள் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு 23ஆம் தேதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டத்தையடுத்து, தமிழகத்தில் பல முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊரடங்கு மேலும் 2 வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

ஓணம் கொண்டாடிய நடிகைகள்: புகைப்படத் தொகுப்பைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்
 

இது குறித்து தமிழக அரசு வெளிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் நடைமுறையிலிருக்கும் ஊரடங்கு 23ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய்த் தொற்றின் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், கரோனா பரவல் கட்டுப்பாடுகள் செப்டம்பர் 6ஆம் தேதி காலை 6 மணி வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே..செப். 1 முதல் ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து: தமிழக அரசு

முன்பே அறிவித்தவாறு இன்று நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும்.

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

உயர் வகுப்புகள் செயல்படுவதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் கல்லூரிகளும் செப். 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

அங்கன்வாடி மையங்கள், செப்டம்பர் 1 முதல் மதிய உணவு வழங்குவதற்கு செயல்பட அனுமதிக்கப்படும்.

ஆந்திர, கர்நாடக மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து இயக்க அனுமதிக்கப்படும்.

மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலை வாய்ப்பு பயிற்சி வகுப்புகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com