தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக வென்றதை அடுத்து அந்த தொகுதி அடங்கிய மாவட்டச் செயலாளர்களுக்கு பாஜக சார்பில் இன்னோவா கார் பரிசு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக எம்எல்ஏக்கள் வெற்றிபெற்றால் அந்த தொகுதி அடங்கிய மாவட்டச் செயலாளர்களுக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்படும் என பாஜக கூறியிருந்தது.
அந்தவகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் எம் ஆர். காந்தி நாகர்கோயிலிலும், வானதி சீனிவாசன் கோவை தெற்கிலும், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியிலும், சரஸ்வதி மொடக்குறிச்சியிலும் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளைச் சேர்ந்த ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோயில், கோவை ஆகிய மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மாவட்டச் செயலாளர் நந்தகுமார், நெல்லை மாவட்டச் செயலாளர் மகாராஜன், ஈரோடு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தர்மராஜன் ஆகியோருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கார்களைப் பரிசாக வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க எஸ்ஐஆா்: உயா்நீதிமன்றத்தை அணுக முதல்வா் மம்தாவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

மேற்காசிய போரின் தாக்கம் ஆரம்பம் மட்டுமே: ராகுல்

ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை

தேவாலயத்தில் பிரசாரம் தொடங்கினாா் மம்தா- மதரீதியான பிளவை அனுமதிக்க மாட்டோம் என உறுதி
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

