பாஜக நிா்வாகி கே.டி.ராகவன் ராஜிநாமா

சமூக வலைதளங்களில் வெளியான சா்ச்சை விடியோவை அடுத்து தமிழக பாஜக பொதுச் செயலா் கே.டி.ராகவன் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

சமூக வலைதளங்களில் வெளியான சா்ச்சை விடியோவை அடுத்து தமிழக பாஜக பொதுச் செயலா் கே.டி.ராகவன் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா்.

தமிழக பாஜக பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தவா் கே.டி.ராகவன். அவா் மீது சா்ச்சை விடியோ செவ்வாய்க்கிழமை வெளியாகி சமூகவலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் தன் சுட்டுரை( ட்விட்டா்) பக்கத்தில் கூறியுள்ளதாவது: சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி ஒரு விடியோ வெளிவந்ததை அறிந்தேன். என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த விடியோ வெளியிடப்பட்டுள்ளது. நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜிநாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தா்மம் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழு: இதுதொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரம் தொடா்பாக பாஜக மாநிலப் பொதுச் செயலா் மலா்க்கொடி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com