மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம்: செல்லூர் ராஜுவுக்கு முதல்வர் விளக்கம்

மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்கப்படும் இடம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எழுப்பிய சந்தேகத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம்: செல்லூர் ராஜுவுக்கு முதல்வர் விளக்கம்
மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம்: செல்லூர் ராஜுவுக்கு முதல்வர் விளக்கம்

மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்கப்படும் இடம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எழுப்பிய சந்தேகத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பது தொடர்பாக மதுரை (மேற்கு) தொகுதி உறுப்பினர் செல்லூர் கே. ராஜு பேசியதற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அளித்த பதிலில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,பென்னிகுயிக் நினைவிடத்தினை மாற்றி, அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே கருணாநிதி பெயரால் அமையவிருக்கக்கூடிய நூலகம் கட்டப்படவிருக்கிறது என்ற ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே இது சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் பேசப்பட்டிருக்கிறது, அப்பொழுதும் பொதுப்பணித் துறை அமைச்சர் மூலமாக விளக்கம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் சொல்கிறேன்; நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. ஒரு தவறான பிரச்சாரத்தினைச் செய்துகொண்டிருக்கிறார்கள். அது சட்டமன்றத்திலும் பதிவாகக் கூடாது என்பதற்காகத்தான் இந்த விளக்கத்தினை நான் சொல்லியிருக்கிறேன்.

(உறுப்பினர் செல்லூர் கே. ராஜு, அதை இடிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாகக் கருத்துத் தெரிவித்தபோது, குறுக்கிட்டு முதல்வர் பதில் அளித்தார்.)

தொடர்ந்து முதல்வர் பேசுகையில், இப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள் ஒரு முன்னாள் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையைக் குறைப்பதாக இருக்கிறது. எனவே ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள் என்று முதல்வர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com