’தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் இல்லை’ அறிக்கை ரத்து: மதுரை மண்டல மின் வாரியம்

கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என மதுரை மண்டல மின்வாரிய பொறியாளர் சுற்றறிக்கை மூலம் இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிக்கை ரத்து செ
’தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் இல்லை’ அறிக்கை ரத்து: மதுரை மண்டல மின் வாரியம்
’தடுப்பூசி செலுத்தாவிட்டால் ஊதியம் இல்லை’ அறிக்கை ரத்து: மதுரை மண்டல மின் வாரியம்

கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாத மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என மதுரை மண்டல மின்வாரிய பொறியாளர் சுற்றறிக்கை மூலம் இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மதுரை மண்டலத்திற்கு உள்பட்ட மின்வாரிய ஊழியர்கள் பலரும் முறையாக கரோனா தடுப்பூசி செலுத்தி இருந்தாலும் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதற்காக  வருகிற டிச.7 ஆம் தேதிக்குள் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மண்டல மின்வாரிய சுற்றறிக்கையில் உத்தரவு வெளியாகியிருந்தது.

அதில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டிசம்பர் மாத ஊதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது அந்த அறிக்கையை ரத்து செய்வதாக மதுரை மண்டல மின்வாரியம் தெரிவித்திருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com