அதிமுக உள்கட்சித் தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு

அதிமுக உள்கட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்கக்கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

அதிமுக உள்கட்சித் தேர்தலுக்குத் தடை விதிக்கக்கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நாளை(டிச. 7) நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கலும் டிச. 4 ஆம் தேதி முடிவடைந்துள்ளது. 

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை கோரி அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சார்பில் வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

ஆனால், மனுத் தாக்கல் செய்யாமல் வழக்கை எடுத்துக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து மனுத் தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு எடப்பாடி கே. பழனிசாமியும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கு எதிராக யாரும் போட்டியிடாததால் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலை உள்ளது. 

முன்னதாக, அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, தேர்தலை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com