புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு

புதுவையில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. 
மாணவர்களுக்கு, மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர் ஆசிரியர்கள்.
மாணவர்களுக்கு, மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர் ஆசிரியர்கள்.

புதுவையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. 

புதுவை மாநிலத்தில் கரோனா போதுமுடக்கத்துக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் 1, 3 ,5 ,7 ஆகிய வகுப்புகளும், 2,4,6 8 ஆகிய வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் மாணவர்களுக்கு அரை நாள் மட்டும் பள்ளிகள் நடத்தப்படும். கரோனா வழிமுறைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளும் செயல்படுத்தப்படுகிறது. 

புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உடைய மாணவர்கள் இன்று காலை ஆர்வத்தோடு பள்ளிக்கு வந்தனர். தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பல இடங்களில் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பளித்தனர். கிருமி நாசினி தெளித்து பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, கரோனா விதிமுறைகள்படி தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ்டூ வகுப்புகள் வரை திங்கள்கிழமை முதல் முழுநேரம் பள்ளிகள் செயல்பட தொடங்கி உள்ளது.

மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்புவது பெற்றோர் விருப்பம் என்றும், கரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே நேரடி வகுப்புகள் நடத்தப்படுவார்கள் என்றும் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என புதுச்சேரி பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com