ஆளுநர் உரையுடன் ஜன.5-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
அப்பாவு (கோப்புப்படம்)
அப்பாவு (கோப்புப்படம்)

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டமானது கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

“தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும்.

ஆளுநர் உரையைத் தொடர்ந்து பொது பட்ஜெட், மானியக் கோரிக்கை உள்ளிட்டவை நடைபெறும். கரோனா விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படும்.

100 சதவீதம் தொடுதிரை உதவியுடன் கணினி மூலம் காகிதம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெறும். பார்வையாளர்கள் அனுமதிப்பது குறித்து அலுவல் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com