நகைக்கடன் முறைகேடு: இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலர் தூக்கிட்டுத் தற்கொலை

நகைக்கடன் முறைகேட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலர் அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுக்கோட்டை: நகைக்கடன் முறைகேட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலர் அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும்ஊரக வளர்ச்சி வங்கியில் நடைபெற்ற நகைக்கடன் பொட்டலங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது ரூ. 1.08 கோடி மதிப்பில் 102 பொட்டலங்கள் இருப்பில் இல்லை.

இதைத்தொடர்ந்து வங்கிச் செயலர் பி. நீலகண்டன் (53) மற்றும் மேற்பார்வையாளர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட செயலர் பி. நீலகண்டன் புதன்கிழமை காலை கீரனூர் சிவன்தெருவிலுள்ள அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த கீரனூர் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com