ராமேசுவரம் மீனவர்கள் 42 பேர் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 42 பேர், அவர்களது 6 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை நள்ளிரவு இரவு சிறைபிடித்துச் சென்றனர். 

ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் வளத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். 

அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் செல்வம், வினால்டல், சார்லஸ், வெல்தாஸ். லியோ ஆகியோருக்கு சொந்தமான 6 விசைப்படகுகளுடன் 42  மீனவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்தனர்.

தற்போது சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com