
ஒமைக்ரான் அச்சுறுத்தல்: ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சுற்றறிக்கை
சென்னை: தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
ஒமைக்ரான் வகை கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிக்க.. கதையல்ல.. நிஜம்: மாதம் ரூ.20,000 சம்பாதிக்கும் சூரத் சிறைக் கைதிகள்
அந்த சுற்றறிக்கையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு கட்டாயம் கரோனா பரிசோதனை நடத்தி, முடிவுகள் வரும்வரை, அவர்களை கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.