அன்னபூரணி அரசு அம்மா யார்? விடியோ வெளியானதால் சொல்வதெல்லாம் பொய்யானது

திடீரென முளைத்த பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவைப் பற்றிய விடியோவை நிச்சயம் தவறவிட்டிருக்கமாட்டார்கள்.
அன்னபூரணி அரசு அம்மா யார்? விடியோ வெளியானதால் சொல்வதெல்லாம் பொய்யானது
அன்னபூரணி அரசு அம்மா யார்? விடியோ வெளியானதால் சொல்வதெல்லாம் பொய்யானது

சமூக வலைத்தளத்தில் நன்கு பரிச்சயமானவர்கள், மனமுருகி தன்னை நாடி வந்த குழந்தைகளுக்கு அருள் புரியும் பராசக்தி அம்மா என்ற அடைமொழியுடன் திடீரென முளைத்த பெண் சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவைப் பற்றிய விடியோவை நிச்சயம் தவறவிட்டிருக்கமாட்டார்கள்.

விடியோவை விடுங்கள்.. நிச்சயம் ஒரு புகைப்படமாவது உங்கள் கண்களில் பட்டிருக்கும். ஏதோ ஒரு பெண் சாமியார் என்று பலரும் அதனைக் கடந்துபோயிருப்பார்கள். ஆனால், எல்லோருமே அப்படி போய் விடுவார்களா என்ன? சமூக வலைத்தளத்திலேயே ஊறிப்போயிருப்பவர்களுக்கு இந்த விடியோவைப் பார்க்கும் போது ஏதோ ஒரு உருத்தல் ஏற்பட்டுத்தானே இருக்கும்?

ஆமாம் யார் இந்த அன்னபூரணி அரசு அம்மா என்று பலரும் தேடியுள்ளார்கள். முதலில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அன்னபூரணி அரசு அம்மாவின் விடியோக்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கும். ஆனால், உண்மையிலேயே கடவுளின் அருள்பெற்ற ஒருவருக்கு, முன்னணி தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்று நடத்திவந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், பஞ்சாயத்தில் பங்கேற்ற அன்னபூரணியின் விடியோ கிடைத்தேவிட்டது.

என்ன பஞ்சாயத்து?
அரசு என்பவருக்கும் அன்னபூரணிக்கும் ஏற்பட்ட பழக்கம் தொடர்பாக, அரசுவின் மனைவியும், அன்னபூரணியின் கணவரும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சிக்கு வந்து இவர்களுக்கு இடையே நடந்த பஞ்சாயத்துதான் நிகழ்ச்சி.

இது தொடர்பான விடியோக்களையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பகிர, அன்னபூரணி அம்மாவின் 'பாட்ஷா பட பின்னணி' போன்ற உண்மைக் கதை வெளி உலகத்துக்கு வந்தது.

அவ்வளவுதான், தற்போதைய விடியோக்களையும், தொலைக்காட்சியில் வந்த விடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் பதிவிட்டு, பல்வேறு காரசார கருத்துகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இதனிடையே, போலி சாமியார் அன்னபூரணி அரசு அம்மாவின் பக்தர்கள், இதுவரை தாம் பார்த்து வந்த விடியோக்களால் பக்தி பரவசம் அடைந்திருந்த நிலையில், தற்போது வெளியான விடியோவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தன்று செங்கல்பட்டில் நடைபெறவிருந்த ஆதிபராசக்தி அம்மாவின் திவ்ய தரிசனம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, அன்னபூரணி அம்மாவை காவலர்கள் தேடி வருவதாகவும், அவரது நிகழ்ச்சி நடைபெறவிருந்த திருமண மண்டபத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்தாண்டு தரிசன நிகழ்ச்சி தொடர்பாக வெளியான விடியோவுடன் இந்த தகவலும் பகிரப்பட்டுள்ளது.

நம்மைப் படைத்த இறைசக்தியான அகிலத்தை ஆளும் நம் தாய் அவர்கள் தன் மீது அன்பும் பக்தியும் கொண்ட அனைத்து மக்களுக்காகவும் இங்கு அவதாரமாக வந்துள்ளார்... தன்னை நாடி வரும் அனைத்து பக்தர்களுக்கு  எல்லாம் வல்ல சக்தியான நம் அம்மா அவர்கள் அருளாசி கொடுக்க இருக்கிறார்... வருகிற ஜனவரி 1 ம் தேதி, சனிக்கிழமை புத்தாண்டு தினத்தன்று அம்மாவின் திவ்ய தரிசனம் அனைத்து மக்களுக்கும் நடைபெற உள்ளது‌. தரிசனத்திற்கு அனுமதி இலவசம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தன்னைத் தானே சாமியார் என்று அறிவித்துக் கொண்டு சிலர் செய்யும் மோசடிகளைப் பார்த்த ஒரு கும்பல், இப்படி ஒருவரை சாமியார் என்று கூறி விடியோக்கள் மூலம் விளம்பரப்படுத்தி, பணம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எத்தனை விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கும் இருக்கத்தான் செய்வார்கள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com