
கோப்புப்படம்
வருகிற ஜனவரி 12 ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் பாஜக சார்பில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள இருக்கிறார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை 1 ஆம் தேதி (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாஜக சார்பில் மதுரையில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது.
அதன்படி, ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறும் பொங்கல் பண்டிகை நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் நடத்த மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G