நெமிலிச்சேரி - மீஞ்சூர் வரையிலான 6 வழித்தட சாலை: பழனிசாமி திறந்துவைத்தார்

சென்னையை அடுத்த நெமிலிச்சேரி - மீஞ்சூர் வரையிலான 6 வழித்தட முக்கிய சாலையினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் திறந்துவைத்தார்.
நெமிலிச்சேரி - மீஞ்சூர் வரையிலான 6 வழித்தட சாலை: பழனிசாமி திறந்துவைத்தார்
நெமிலிச்சேரி - மீஞ்சூர் வரையிலான 6 வழித்தட சாலை: பழனிசாமி திறந்துவைத்தார்

சென்னை: சென்னையை அடுத்த நெமிலிச்சேரி - மீஞ்சூர் வரையிலான 6 வழித்தட முக்கிய சாலையினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி மூலம் திறந்துவைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் குறிப்பில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று (8.2.2021) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்குட்பட்ட சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டமாக 1,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரையிலான 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு வழித்தட பிரதான சாலையினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகிவரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் கொள்ளளவை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதிசெய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, ஆவடி மற்றும் பொன்னேரி வட்டங்களுக்குட்பட்ட, சென்னை வெளிவட்டச் சாலையின் இரண்டாம் கட்டமாக 1,025 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெமிலிச்சேரி (தேசிய நெடுஞ்சாலை 716) முதல் பாடியநல்லூர் (தேசிய நெடுஞ்சாலை 16) வழியாக திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையில் 30.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஆறு வழித்தட பிரதான சாலையினை தமிழக முதல்வர் பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், நெடுஞ்சாலைத் துறையில் 2018-19 மற்றும் 2019-20-ஆம் ஆண்டுகளுக்கான 94 தட்டச்சர் பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதியின் கீழ் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர், இன்று 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் ராஜீவ் ரஞ்சன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் ஆ.கார்த்திக், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ரெ.கோதண்டராமன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஒய்.ஆர்.பாலாஜி, ஜி.வி.ஆர். மற்றும் அசோகா நிறுவன பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com