
புதுச்சேரிக்கு வருகை தந்த ராகுலிடமே, நாராயணசாமி பொய் சொன்னார் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுச்சேரிக்கு வருகை தந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஜிப்மரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், லாஸ்பேட்டையில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, புதுச்சேரி மக்கள் பங்கேற்கும் அரசு இங்கு தேவை. தற்போது புதுச்சேரியில் காற்று மாசி வீசி வருகிறது. எனவே, 2021-ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் சக்தியால் இயங்கும் அரசு புதுச்சேரியில் அமையும்.
இதையும் படிக்கலாமே.. அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்வு: முதல்வர்
காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி இயங்கிய அரசு புதுச்சேரியில் அனைத்தையும் அழித்தது. புதுச்சேரியில் இருந்த காங்கிரஸ் அரசு மத்திய அரசுடன் ஒத்துழைக்கவில்லை. மத்திய அரசு கொடுத்த நிதியை பயன்படுத்தவில்லை. மோசமான காங்கிரஸ் அரசின் நிர்வாகத்திடமிருந்து புதுச்சேரி மக்கள் விடுதலை பெற்றுள்ளனர். நாட்டுக்கு உண்மையை சொல்வதற்கு பதில் நாராயணசாமி பொய் உரைத்தார் என்று கூறினார்.
ராகுல் காந்தியின் புதுச்சேரி வருகையின்போது மீனவப் பெண் புகார் அளித்ததை நாராயணசாமி மாற்றிக் கூறியது குறித்து பிரதமர் மோடி பேசினார்.
இதையும் படிக்கலாமே.. 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி: பழனிசாமி அறிவிப்பு
மழை, வெள்ளத்தின்போது வந்து பார்க்கவில்லை என்று மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண் அளித்த புகாரையே ராகுலிடம் மாற்றிக் கூறியவர் நாராயணசாமி என்றும், மீனவப் பெண்மணி கூறிய குற்றச்சாட்டை, ராகுல் காந்திக்கு தவறாக மொழி பெயர்த்துக் கூறியவர் நாராயணசாமி என்றும் மோடி கூறினார்.
புதிய தொழில்கள் தொடங்குவதற்குத் தேவையான உதவிகளை செய்து வருகிறோம். குஜராத், காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. ஆனால் புதுச்சேரியில் நடைபெறவில்லை என்று பிரதமர் மோடி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.