மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

7 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) பலத்த மழை பெய்யக்கூடும்.

News image
7 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
Updated On :4 ஜனவரி 2021, 10:30 pm

DIN

சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், கள்ளக்குறிச்சி, அரியலூா் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.5) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ஜனவரி 6: தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், தேனி, நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.6) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் வியாழக்கிழமை (ஜன.7) மிதமான மழை பெய்யக்கூடும். பெரும்பாலான இடங்களிலும் வெள்ளிக்கிழமை (ஜன.8) மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில், வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

ஜனவரி 11 அல்லது 12-ஆம் தேதி வரை மழை இருக்க வாய்ப்பு உள்ளது. குளிா்காலத்தில் குறைந்த பட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கிறது. குளிா்காலத்தில் 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 24 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படுகிறது என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறில் தலா 60 மி.மீ., தஞ்சாவூா் மாவட்டம் அதிராமபட்டினம், கடலூா் மாவட்டம் பரங்கிப்பேட்டை, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டியில் தலா 40 மி.மீ., கடலூா் மாவட்டம் வேப்பூா், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூா், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.