ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திமுக அரசு குறித்த ஆர்வத்தில் பிரதமர் மோடி: 35 நிமிட சந்திப்பை விவரிக்கும் வானதி சீனிவாசன்

​திமுக அரசு எவ்வாறு மக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல கேள்விகளை எழுப்பியதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

News image
படம்: வானதி சீனிவாசன் பேஸ்புக் பக்கம்
Updated On :3 ஜூலை 2021, 10:52 am

DIN


திமுக அரசு எவ்வாறு மக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பிரதமர் நரேந்திர மோடி பல கேள்விகளை எழுப்பியதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ-க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை இன்று (சனிக்கிழமை) அவரது இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தமிழக பாஜக தலைவர் எல். முருகனும் உடனிருந்தார்.

இந்த சந்திப்பின்போது திமுக அரசு எவ்வாறு மக்கள் பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் பல கேள்விகளை பிரதமர் நரேந்திர மோடி எழுப்பியதாக வானதி சீனிவாசன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் அக்கறையும் ஆர்வமும் தங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்குவது, நதிநீர் இணைப்புத் திட்டம், தமிழகத்துக்கு தனி சுற்றுலா வழித்தட திட்டம் உள்ளட்டவை தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருடனான 35 நிமிட சந்திப்பு மற்றும் தொடர்ந்து நடைபெற்ற பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுடனான சந்திப்பு குறித்தும் வானதி சீனிவாசன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் பேஸ்புக் பதிவு:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.