அதிமுக-பாஜக கூட்டணி தொடருமா?: ஜெயக்குமார் விளக்கம்

உள்ளாட்சித் தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

அதிமுக-பாஜக கூட்டணி சர்ச்சை குறித்து விளக்கமளித்த அவர், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கே.டி.ராகவன் இடையேயான 
பிரச்னை குறித்து கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும். 

உள்கட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளார். அதிகாரப்பூர்வமாகவும், வெளிப்படையாகவும் அவர் கருத்து தெரிவிக்கவில்லை. இதனால் இந்த விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே மற்ற கட்சிகளுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். சட்டப்பேரவை தேர்தல் தோல்வி தொடர்பாக கட்சி தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com