'ஒரு ரூபாய் தானே என்று எண்ண வேண்டாம்' : எச்சரிக்கும் காவல்துறை

செல்லிடப்பேசி செயலிகள் மூலம் மிகக் குறைந்த பணத்தை செலுத்துமாறு வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை காவல்துறை விடுத்திருக்கும் எச்சரிக்கை செய்தியில், "ஏதேனும் வசதிகளை பெற அல்லது பதிவு செய்ய வேல்லெட் ஆப் மூலம் ரூ.1, ரூ.10 செலுத்துமாறு ஏதேனும்  இணைய முகவரி குறுந்தகவலாகவோ, மின்னஞ்சலாகவோ அனுப்பப்பட்டால் கவனம்.  

சிறு தொகை என நினைத்து போலியான முகப்பில் செலுத்துவதன் மூலம் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் நீங்கள் இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்களே, ஒரு ரூபாய் தானே என்று எண்ணாமல், சமூக வலைத்தளங்களில் முன்பின் தெரியாத யாருக்கும் பணப்பரிமாற்றம் செய்து, தேவையில்லாமல் மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com