மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில இடங்களில் ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

Published On :

தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில இடங்களில் ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது: தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் சில இடங்களில் ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை

4 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூலை 21: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜூலை 21) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேகமாக வட வானிலையே நிலவும்.

ஜூலை 22: நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜூலை 22-ஆம் தேதி பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசிஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

இதுபோல் ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூா் ஆகிய 2 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தமிழக கடலோரம், மன்னாா் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகள், தெற்கு வங்கக் கடல், மத்திய வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 24-ஆம்தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென் மேற்கு அரபிக்கடல், மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் வடக்கு அரபிக்கடல், பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 24 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.