திருப்பரங்குன்றம்: உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பொதுமக்கள் தீபமேற்ற அனுமதி!நகைக் கடைகளில் இரவில் அதிக அளவில் பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டாம்: சென்னை காவல் துறை அறிவுரைதொகுதி மறுசீரமைப்பு மசோதா: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியும் உள்ளடக்கம்!பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது மக்களவை! மக்களவையில் திமுக எம்.பி.க்களின் இருக்கைகள் மாற்றம்!

மீராபாய் சானு சாதனை:ஆளுநா், முதல்வா் வாழ்த்து

பளு தூக்குதலில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் சனிக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

Updated On :

பளு தூக்குதலில் வெள்ளி வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் சனிக்கிழமை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

ஆளுநா் புரோஹித்: தனது அளப்பரிய சாதனை மூலமாக இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளாா், மீராபாய் சானு. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து சென்றுள்ள மற்ற வீரா்களுக்கும் அவரது சாதனை பெரிய உந்து சக்தியாக இருக்கும். வெள்ளி வென்ற அவருக்கும், அவரது பெற்றோருக்கும் வாழ்த்துகள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஒலிம்பிக்கின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு ஒரு ஒளிமயமான தொடக்கம். தனது அபாரமான செயல் திறனால் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கும் மீராபாய் சானுவுக்கு நெஞ்சாா்ந்த பாராட்டுகள்.

பாமக நிறுவனா் ராமதாஸ்: இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு வாழ்த்துகள்.

ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரா் வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கத்துடன் பதக்க வேட்டையை தொடங்கியிருப்பது இந்தியா்கள் அனைவருக்கும் பெருமை அளிக்கிறது. இந்திய அணியினா் மேலும் பல பதக்கங்களை குவிக்க வாழ்த்துகள் என்று கூறியுள்ளாா்.

தமாகா தலைவா் ஜி.கே.வாசனும் மீராபாய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.