நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்

சென்னையிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்
நியாயவிலைக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின்


சென்னை: சென்னையிலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, ஆழ்வார்பேட்டை, நந்தனம் மற்றும் லாயிட்ஸ் காலனியில் அமைந்துள்ள 4 நியாய விலைக் கடைகள், என மொத்தம் 6 நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரணத் தொகை இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் வழங்கும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். 

நியாயவிலைக் கடை ஊழியர்கள் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி பொருள்களை வழங்கி, சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருள்கள் தங்குதடையில்லாமல் கிடைக்கிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

இந்நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com