
திருமண நிகழ்வுக்கான இ-பதிவில் தவறு ஏதேனும் செய்தால் சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
27 மாவட்டங்களில் திருமணத்துக்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதைத் தொடர்ந்து மேலும் சில தளர்வுகளுடன் மாவட்டங்களை மூன்று கட்டங்களாகப் பிரித்து தமிழக அரசு மேலும் சில தளர்வுகளை அளித்துள்ளது.
அதன்படி சில மாவட்டங்களுக்கு இ-பாஸ் விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் மற்ற மாவட்டங்களில் இ-பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமண நிகழ்வுக்கான இ-பதிவில் தவறு ஏதேனும் செய்தால் சிவில் அல்லது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
27 மாவட்டங்களில் திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தவறான தகவல் தந்தாலோ, அதிகம் பேர் இ-பதிவு செய்திருந்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.