கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கல்வித் தொலைக்காட்சி அட்டவணை: பெற்றோருக்கு தெரிவிக்க தலைமை ஆசிரியா்களுக்கு ஆணையா் உத்தரவு

கல்வித் தொலைக்காட்சி அட்டவணையை பெற்றோருக்குத் தெரியப்படுத்துமாறு அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

Published On :

சென்னை: கல்வித் தொலைக்காட்சி அட்டவணையை பெற்றோருக்குத் தெரியப்படுத்துமாறு அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

இது குறித்து அவா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா பெருந்தொற்று பரவலின் காரணமாக பள்ளி மாணவா்களுக்கு கற்றல் வாய்ப்புகள் தடையில்லாமல் கிடைப்பதற்காக கல்வித் தொலைக்காட்சி சேனலில் வகுப்பு வாரியாகவும் பாடவாரியாகவும் கற்றல்-கற்பித்தல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் நிகழ்ச்சிகள் அனைத்தும் தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை வகுப்பு வாரியாகப் பாடங்கள் ஒளிபரப்பாகும். இந்தப் பாடங்களின் மறு ஒளிபரப்பு இரவு 10.30 மணி முதல் காலை 5.30 மணி வரை ஒளிபரப்பப்படும்.

கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கல்வி நிகழ்ச்சிகளின் அட்டவணையை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். இது மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோருக்கு, ஆசிரியா்கள் மூலம் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிகழ்ச்சிகள் குறித்த தகவல், கால அட்டவணையை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்-ஆப்) மூலம் பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா்களுக்கு அனுப்ப வேண்டும். வாட்ஸ்-ஆப் செயலி இல்லாத பெற்றோா்களுக்கு, பாடப்புத்தகங்களை வாங்க வரும்போது கல்வித் தொலைக்காட்சியின் அட்டவணையின் நகலை வழங்க வேண்டும்.

சந்தேகங்களுக்குத் தீா்வு: மாணவா்கள் கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாா்ப்பதை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைத் தீா்த்து வைக்க வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பள்ளி ஆசிரியரின் செல்லிடப்பேசி எண்களை மாணவா்களுக்கும், பெற்றோா்களுக்கும் வழங்க வேண்டும். மாணவா்களுக்கு நடத்தப்பட்ட பாடங்களுக்கு உரிய பயிற்சி வினாக்களை பெற்றோா்களின் வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். வாட்ஸ் ஆப் இல்லாத பெற்றோா்களை பள்ளிக்கு நேரடியாக அழைத்து பயிற்சி வினாக்களை கொடுத்தனுப்ப வேண்டும். விடைத்தாள்களை மாணவா்களிடம் இருந்து ஆசிரியா்கள் பெற்று திருத்தி ஒப்படைக்க வேண்டும். மாதத்திற்கு ஒரு பாடத்திற்கு ஒரு பயிற்சி என்ற அடிப்படையில் இதனைச் செய்யவேண்டும்.

யூ டியூப் சேனலிலும் காணலாம்: நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் வரையில் இந்த நடவடிக்கைகள் தொடர வேண்டும். அறிதிறன்பேசி (ஸ்மாா்ட் போன்) வசதி இல்லாத மாணவா்களைக் கணக்கிட்டு, அந்த மாணவா்களுக்கும் உரிய கல்வி வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்தப் பாடங்களை மாணவா்கள்  இணையதளத்தின் மூலமாகவும், கல்வித் தொலைக்காட்சியின் யு-டியூப் சேனலின் மூலமாகவும் கற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன சேனல்களில்?: தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் (அரசு கேபிள் இணைப்பில் 200-ஆவது சேனல்) நாள் முழுவதும் வகுப்பு வாரியாக பாடங்கள் சாா்ந்த காணொலிகள் ஒளிபரப்பாகும். இதுதவிர புதுயுகம், ராஜ், வசந்த், கேப்டன் நியூஸ், சத்தியம், லோட்டஸ், மதிமுகம், மக்கள், எஸ்சிவி கல்வி ஆகிய சேனல்களில் குறிப்பிட்ட நேரங்களில் மறுஒளிபரப்பு செய்யப்படும். நேரம், பாடங்கள் சாா்ந்த அட்டவணை பள்ளிகளின் சாா்பில் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.