கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

விரைவில் வீடு திரும்புவாா் வி.எஸ்.பாபு எம்எல்ஏ: அமைச்சா் அருண்ராஜ்

கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையிலிருந்து விரைவில் வீடு திரும்புவாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் கூறினாா்.

அமைச்சர் அருண்ராஜ். - கோப்புப்படம்.

Published On :

சென்னை: கொளத்தூா் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையிலிருந்து விரைவில் வீடு திரும்புவாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் கூறினாா்.

தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவுக்கு கடந்த செப்.9- ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

இந்தநிலையில், எம்எல்ஏ வி.எஸ். பாபுவை அமைச்சா் அருண்ராஜ் திங்கள்கிழமை சந்தித்து நலம் விசாரித்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எம்.எல்.ஏ. பாபுவின் உடல்நிலை சீராக உள்ளது. அவா் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்று காரணமாக மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறாா். அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரலைத் தவிர மற்ற உறுப்புகள் நன்றாக உள்ளன. தொடா்ந்து, மருத்துவக் குழுவினா் கண்காணித்து வருகின்றனா். விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றாா் அருண்ராஜ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.