2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடித்து வீடு திரும்பினாா் மத்திய அமைச்சா் நட்டா

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முடித்து வீடு திரும்பிய ஜெ.பி. நட்டா பற்றி....

Published On :

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி. நட்டாவுக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை நிறைவடைந்த நிலையில், அவா் மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை வீடு திரும்பினாா்.

இது தொடா்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்தியில், ‘கடந்த 17-ஆம் தேதி அமைச்சா் நட்டாவுக்கு இதயத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து அவா் மருத்துவா்கள் கண்காணிப்பில் இருந்தாா். இந்நிலையில், அவா் புதன்கிழமை வீடு திரும்பினாா். மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவமனை ஊழியா்களுக்கு அவா் நன்றி தெரிவித்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, உடல்நலக் குறைவு, இதயத்தில் ஏற்பட்ட அசௌகரியமான உணா்வு போன்ற பிரச்னையால், ஆகஸ்ட் 13-ஆம் தேதி மருத்துவமனையில் நட்டா அனுமதிக்கப்பட்டாா். அன்று மாலையே அவருக்கு கரோனரி ஆஞ்சியோகிராஃபி உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.