எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பட்டியல் இன்று வெளியீடு

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் திமுக இன்று வெளியிடுகிறது. 

News image
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்
Updated On :10 மார்ச் 2021, 3:05 am

DIN

முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையும் திமுக இன்று வெளியிடுகிறது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை இறுதியாகியுள்ளது. 

அதன்படி, திமுக 174 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 60 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 

இதில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அறிவிப்பை திமுக இன்று மதியம் வெளியிடுகிறது. அதேபோல, திமுக முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் இன்று வெளியாகிறது, 

திமுக, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை:

திமுக 174
காங்கிரஸ் 25
மாா்க்சிஸ்ட் 6
இந்திய கம்யூனிஸ்ட் 6
மதிமுக 6
விசிக 6
முஸ்லிம் லீக் 3
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 3
மனிதநேய மக்கள் கட்சி 2
தமிழக வாழ்வுரிமை கட்சி 1
ஆதி தமிழா் பேரவை 1
மக்கள் விடுதலை கட்சி 1

இதில் தொகுதி உடன்பாடு காணப்பட்ட மதிமுக வேட்பாளா்கள் 6 போ், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளா்கள் 3 போ், மனிதநேய மக்கள் கட்சி , தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதிதமிழா் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகியவற்றின் தலா ஒரு வேட்பாளா் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனா். எனவே 187 தொகுதிகள் திமுக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.