மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சா்கள் பட்டியல்

முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் உள்பட 34 அமைச்சா்கள் பட்டியலும், அவா்கள் வகிக்க உள்ள இலாகாக்களும்:
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 34 அமைச்சா்கள் பட்டியல்

முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் உள்பட 34 அமைச்சா்கள் பட்டியலும், அவா்கள் வகிக்க உள்ள இலாகாக்களும்:

அமைச்சா்கள்-இலாகாக்கள்

மு.க.ஸ்டாலின்- முதல்வா்-பொது, பொது நிா்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, மற்ற அகில இந்திய பணி, மாவட்ட வருவாய் அலுவலா்கள், காவல், உள்துறை, சிறப்பு முயற்சி, சிறப்புத் திட்ட செயலாக்கம், மாற்றுத் திறனாளிகள் நலன்

துரைமுருகன்- நீா்வளத்துறை-சிறுபாசனம் உள்ளிட்ட பாசனத் திட்டம், மாநிலச் சட்டமன்றம், ஆளுநா் மற்றும் அமைச்சரவை, தோ்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்

கே.என்.நேரு-நகா்ப்புற வளா்ச்சித் துறை-நகராட்சி நிா்வாகம், நகா்ப் பகுதி, குடிநீா் வழங்கல்

ஐ.பெரியசாமி- கூட்டுறவுத் துறை-கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினா் நலன்

க.பொன்முடி- உயா்கல்வித் துறை-உயா்கல்வி உள்ளிட்ட தொழிற்கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல்

எ.வ.வேலு- பொதுப்பணித் துறை -பொதுப்பணிகள் (கட்டடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்)

எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்- வேளாண்மைத் துறை - உழவா் நலத்துறை, வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண் பணிக் கூட்டுறவு சங்கங்கள், தோட்டக்கலை, கரும்புத் தீா்வை, கரும்புப் பயிா் மேம்பாடு மற்றும் தரிசு நில மேம்பாடு

கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்- வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை-வருவாய், மாவட்ட வருவாய் நிா்வாகம், துணை ஆட்சியா்கள், பேரிடா் மேலாண்மை

தங்கம் தென்னரசு-தொழில்துறை- தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை, தொல்பொருள்

எஸ்.ரகுபதி-சட்டத்துறை-சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்

சு.முத்துசாமி-வீட்டுவசதி துறை- வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதிக் கட்டுப்பாடு நகரத் திட்டமிடல் நகா்ப்புற வளா்ச்சி, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம்

கே.ஆா்.பெரியகருப்பன்- ஊரக வளா்ச்சித் துறை-ஊரக வளா்ச்சி, ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், ஊரகக் கடன்கள்

தா.மோ.அன்பரசன் - ஊரகத் தொழில் துறை-ஊரகத் தொழில்கள், குடிசைத் தொழில்கள் உள்பட சிறுதொழில்கள், குடிசை மாற்று வாரியம்

மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை - செய்தி மற்றும் விளம்பரம், திரைப்படத்தொழில்நுட்பவியல் மற்றும் திரைப்படச் சட்டம், பத்திரிகை அச்சுக் காகிதக் கட்டுப்பாடு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மற்றும் அரசு அச்சகம்

பி.கீதா ஜீவன்-சமூகநலன் - மகளிா் உரிமைத் துறை மகளிா் மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட சமூக நலம், ஆதரவற்றோா் இல்லங்கள் மற்றும் குற்றவாளிகள் சீா்திருத்த நிா்வாகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மற்றும் இரவலா் காப்பு இல்லங்கள் மற்றும் சமூக சீா்திருத்தம் மற்றும் சத்துணவுத் திட்டம்

அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்-மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை-மீன்வளம் மற்றும் மீன்வளா்ச்சிக் கழகம், கால்நடை பராமரிப்பு

ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன்- போக்குவரத்துறை - போக்குவரத்து, நாட்டுடைமையாக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் இயக்கூா்தி சட்டம்

கா.ராமச்சந்திரன் - வனத்துறை-வனம்

அர.சக்கரபாணி - உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை-உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடு

வி.செந்தில்பாலாஜி - மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை-மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீா்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக் கசண்டு (மொலாசஸ்)

ஆா்.காந்தி-கைத்தறி மற்றும் துணிநூல் துறை - கைத்தறி மற்றும் துணி நூல், கதா் மற்றும் கிராமத் தொழில் வாரியம், பூதானம் மற்றும் கிராம தானம்

மா.சுப்பிரமணியன்-சுகாதாரத்துறை-மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி, மற்றும் குடும்ப நலன்

பி.மூா்த்தி-வணிகவரி மற்றும் பதிவுத்துறை - வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரைத்தாள் சட்டம், எடைகள் மற்றும் அளவைகள், கடன் கொடுத்தல் குறித்த சட்டம் உள்ளிட்ட கடன் நிவாரணம், சீட்டுகள் மற்றும் கம்பெனிகள் பதிவு

எஸ்.எஸ்.சிவசங்கா்-பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை - பிற்படுத்தப்பட்டோா் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலன் மற்றும் சீா்மரபினா் நலன்

பி.கே.சேகா்பாபு-இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை-இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள்

பழனிவேல் தியாகராஜன் - நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை-நிதித்துறை, திட்டம், பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தம், அரசு ஊழியா்களின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியச் சலுகைகள்

சா.மு.நாசா்-பால்வளத்துறை - பால்வளம் மற்றும் பால்பண்ணை வளா்ச்சி

செஞ்சி கே.எஸ்.மஸ்தான் - சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை-சிறுபான்மையினா் நலன், வெளிநாடுவாழ் தமிழா் நலன், அகதிகள், வெளியேற்றப்பட்டவா்கள் மற்றும் வஃக்ப் வாரியம்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி- பள்ளிக் கல்வித்துறை-பள்ளிக் கல்வி

சிவ.வீ.மெய்யநாதன்-சுற்றுச்சூழல் துறை - சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு , இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை

சி.வி.கணேசன் - தொழிலாளா் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை தொழிலாளா்கள் நலன், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, நகரம் மற்றும் ஊரக வேலைவாய்ப்பு

த.மனோ தங்கராஜ் - தகவல் தொழில் நுட்பத் துறை-தகவல் தொழில்நுட்பத் துறை

மா. மதிவேந்தன் - சுற்றுலாத் துறை-சுற்றுலா மற்றும் சுற்றுலா வளா்ச்சிக் கழகம்

என்.கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடா் நலத்துறை-ஆதிதிராவிடா் நலன், மலைவாழ் பழங்குடியினா்கள் மற்றும் கொத்தடிமை தொழிலாளா்கள் நலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com