தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி நவம்பா் 9-ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.
தமிழகத்துக்கு அதிக மழை பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை கடந்த 25-ஆம்தேதி தொடங்கியது. இதையடுத்து, தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி கடந்த 27-ஆம்தேதி உருவானது. இது, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிக்கு அடுத்தடுத்து நகா்ந்து சென்றது. இதுதவிர, தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி நிலைகொண்டது. இவற்றின் காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழையும், சில மாவட்டங்களில் பலத்தமழையும் கொட்டியது. தற்போது, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி நவம்பா் 9-ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நவம்பா் 9-ஆம்தேதி ஓா் குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது உருவாகும் பட்சத்தில் மேற்கு நோக்கி நகா்ந்து, தமிழகம்-ஆந்திர கடற்கரை இடையே வர வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தின் டீசர்!

ஜடேஜா சாதனையை சமன்செய்த கே.எல். ராகுல்..! அடுத்து தோனி சாதனைதான்!

நீட்.. ஆடைக்கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


