சென்னையில் மேலும் 3 மணி நேரம் கனமழை நீடிக்கும்!

சென்னையில் மேலும் 3 மணி நேரம் கனமழை நீடிக்கும்!

சென்னையில் மேலும் 3 மணி நேரத்திற்க்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னையில் மேலும் 3 மணி நேரத்திற்க்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தெற்கு ஆந்திரம்-வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.7) முதல் நவ.9-ஆம் தேதி வரையிலான 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் நவ.7 முதல் 9-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் சனிக்கிழமை கூறியிருந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ.7) விடிய விடிய இடி, மின்னல், காற்று சத்தமில்லாமல் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் மேலும் 3 மணி நேரத்திற்க்கு கனமழை நீடிக்கும். கடலோர மாவட்டங்கள் மிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகைப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை உள்ளிட்ட 15 மாவடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னல், காற்று சத்தமில்லாமல் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. 

சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 21.53 மி.மீ., மழைப் பதிவாகியுள்ளது. 

வில்லிவாக்கத்தில் 16.2 மி.மீ., எம்.ஆர்.சி. நகர் 14 மி.மீ., புழல் 11 மி.மீ., தரமணி 10.6. மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. 

சென்னையில் சென்ட்ரல், சைதாப்பேட்டை, எழும்பூர், கோடம்பாக்கம், வடபழனி, அண்ணாநகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 

உதவி எண்கள் அறிவிப்பு: சென்னையில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

அதன்படி, 1913, 04425619206, 04425619207, 04425619208, வாட்ஸ்அப் - 9445477205 ஆகிய எண்களில் மக்கள் தொடர்புகொண்டு அழைக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com