காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 9 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாணவர்கள் சிரமத்தை கருத்தில்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 நவம்பர் 2021, 3:18 am

DIN

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாணவர்கள் சிரமத்தை கருத்தில்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

இதுவரை 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 9 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல்,  கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, கரூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், சிவகங்கை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.