புதுச்சேரியில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை: 9.50 செ.மீ பதிவு

புதுச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே செவ்வாய்க்கிழமை பகலில் மழை விட்டிருந்த நிலையில் மீண்டும்  இரவு 10 மணி முதல் தொடங்கிய மழை விடியற்காலை வரை மழை பெய்தது.
புதுச்சேரியில் கனமழையால் கிழக்கு கடற்கரை சாலையில் தேங்கியுள்ள மழைநீர்.
புதுச்சேரியில் கனமழையால் கிழக்கு கடற்கரை சாலையில் தேங்கியுள்ள மழைநீர்.

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே செவ்வாய்க்கிழமை பகலில் மழை விட்டிருந்த நிலையில் மீண்டும்  இரவு 10 மணி முதல் தொடங்கிய மழை விடியற்காலை வரை மழை பெய்தது. தொடர்ந்து புதன்கிழமை காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

புதுச்சேரி நகரப்பகுதி கடலோரப் பகுதி மற்றும் வில்லியனூர், திருக்கனூர், பாகூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.

புதுச்சேரியில் கனமழையால்  சாலையில் தேங்கியுள்ள மழைநீர்.

புதுச்சேரியில் புதன்கிழமை காலை நிலவரப்படி, பதிவான மழையளவு: புதுச்சேரி 95 மில்லி மீட்டர், பத்துக்கண்ணு 53 மில்லி மீட்டர், திருக்கனூர் 75 மில்லி மீட்டர், பாகூர் 72 மில்லி மீட்டர் என மழை பதிவானது.

இதனால் புதுச்சேரியில் வழக்கம்போல் நகரப் பகுதிகளான பாவனன் நகர், கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழை நீரானது தேங்கி வருகிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க 200 முகாம்களை அமைத்து அரசு ஏற்பாடு செய்துள்ளது.

வெள்ள மீட்பு முன்னெச்சரிக்கையாக, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் புதுச்சேரி வருகை தர உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com