சீர்காழி: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சீர்காழியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கல்லூரி மாணவன் ஒருவர் காயமடைந்தார்.
வடகிழக்கு பருவமழை கடந்த 28 ஆம் தேதி இரவு தொடங்கியது. இது தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் சீர்காழி பகுதியில் தாழ்வான பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கண்ணூர்-யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் மலைப்பாதையில் தடம் புரண்டது
இதனிடையே சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயில் அருகிலுள்ள நாகை மேல வீதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சூர்யகுமார் (16). பாலிடெக்னிக் மாணவர். நேற்று வியாழக்கிழமை இரவு சூர்யகுமார் வீட்டின் கழிப்பறையில் இருந்த போது பக்கவாட்டு சுற்று சுவர் இடிந்து விழுந்தது. இதில் காயம் அடைந்த சூர்யகுமாரை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே நாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

13,380 mAh பேட்டரி, 12ஜிபி ரேம்.. ஒன்பிளஸ் டேப்லெட் பேட் 4-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


