கனமழை: 'மளிகைப் பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ளுங்கள்'

அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் 2 நாள்களுக்குத் தேவையான குடிநீர், பால், உணவுப் பொருள், காய்கறிகளை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடல் இருந்து நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரத்திற்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், அடுத்த இரண்டு நாள்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், உணவுப் பொருள்களை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மழை தொடர்பான உதவிகள் பெற வாட்ஸ்ஆப் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 94454 77205, 94450 25819, 944450 25820, 94454 25821 என்ற எண்களில் மழை தொடர்பான புகார்களை அளிக்கலாம். 

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், நீர்நிலைகள், கால்வாய்கள், மழைநீர் தேங்கும் இடத்தில் மக்கள் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கியுள்ளனர். 

மழை தொடர்பான புகார், நிவாரண உதவிகளுக்கு 1913 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com