நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

நவ.1 முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.  
நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

நவ.1 முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 
தமிழகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று குறைந்துள்ளதால், கடந்த செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 9,10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த பெற்றோா்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நவம்பா் 1 ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நவ.1 முதல் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. 

அதில், காலை முதல் மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும்.
திங்கள்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் அன்று விடுமுறை.
எந்த வகுப்பு மாணவர்களை எந்தெந்தநாளில் வரவைக்க வேண்டும் என்பதை பள்ளிகளே முடிவு செய்யலாம்.
மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை, விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம்.
ஆன்லைன் வகுப்பு மூலமாகவும் மாணவர்கள் படிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com