தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,509 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 20 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 1,512 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை புதன் கிழமை (செப்.1) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிதாக 1,509 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தமாக பாதிக்கப்படோர் எண்ணிக்கை 26,16,381-ஆக உயர்ந்துள்ளது.
இன்று பலி எண்ணிக்கை 20-ஆக குறைந்துள்ளது. எனினும் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,941-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து 1,719 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 25,64,820-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 16,620 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் 1,54,718 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக...
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 177 பேரும், ஈரோட்டில் 137 பேரும், செங்கல்பட்டில் 99 பேரும், திருச்சியில் 73 பேரும், திருப்பூரில் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.