
கரோனா பாதிப்பு: சென்னையை விட கோவையில் அதிகம்
தமிழகத்தில் அதிக அளவாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று (ஆக. 31) சென்னையில் அதிக பாதிப்பு பதிவாகியிருந்த நிலையில், இன்று (செப்.1) சென்னையை கோவை முந்தியுள்ளது.
கோவையில் கரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கட்டுள்ளன. எனினும் கோவையில் கரோனா பாதிப்பு இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,509 பேருக்கு கரோனா; 20 பேர் பலி
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 186 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 177 பேரும், ஈரோட்டில் 137 பேரும், செங்கல்பட்டில் 99 பேரும், திருச்சியில் 73 பேரும், திருப்பூரில் 72 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.