சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

சென்னையில் கரோனா குறைகிறது; 26 மாவட்டங்களில் பலி இல்லை

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
சென்னையில் கரோனா குறைகிறது; 21 மாவட்டங்களில் பலி இல்லை
Updated On :21 செப்டம்பர் 2021, 3:52 pm

DIN


சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதிதாக 198 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 218 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். 

ஈரோட்டில் 117-ஆக இருந்த கரோனா பாதிப்பு இன்று 112-ஆக குறைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருப்பூரில் 85 பேரும், தஞ்சாவூரில் 79 பேரும், சேலத்தில் 77 பேரும், திருச்சியில் 66 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னையில் கரோனவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 198-ஆக குறைந்துள்ளது. இருவர் உயிரிழந்த நிலையில், 183 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் இன்று மட்டும் 12 வயதுக்கு உட்பட்ட 88 சிறார்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.