தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி மற்றும் மொத்த கொள்ளளவு 1,666.29 மில்லியன் கன அடியாகும்.

செப். 22 ஆம் தேதி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50.9 அடி மற்றும் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 717 கன அடியாக உள்ளது.

அணையின் பாதுகாப்பு கருதி, மேற்கொண்டு வரும் நீர் முழுவதும் அணையில் இருந்து வெளியேற்றப்பட வேண்டியுள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் ஆற்றங்கரை ஓரத்தில் மற்றும் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி. ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து தென்பெண்ணை ஆறு பாயும் தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம்,கடலூர் ஆகிய மாவட்டங்களின் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com