கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் வேட்புமனுக்கள் ஏற்பு

மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 
கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் வேட்புமனுக்கள் ஏற்பு

மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து பேரவைச் செயலரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி. சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கே.பி. முனுசாமி மற்றும் ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க செப்டம்பர்-அக்டோபர், 2021-இல் தனித்தனியாக நடைபெறும் இடைத்தேர்தல்களுக்கு வரப்பெற்ற வேட்பு மனுக்கள் இன்று (23.09.2021) முற்பகல் 11.00 மணிக்கு கூர்ந்தாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

கே.பி. முனுசாமியின் வெற்றிடத்தை நிரப்ப பெறப்பட்ட வேட்பு மனுக்களின் ஆய்வுக்குப் பின், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த கனிமொழி என்விஎன் சோமுவின் வேட்பு மனு செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டது.
இத்தேர்தலில், கீழ்க்கண்ட 3 சுயேட்சை வேட்பாளர்களால் அளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன:
1. ந. அக்னி ஸ்ரீராமசந்திரன்
2. கு. பத்மராஜன்
3. சா. புஷ்பராஜ்
ஆர். வைத்திலிங்கம் அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப பெறப்பட்ட வேட்பு மனுக்களின் ஆய்வுக்குப் பின், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த கே.ஆர்.என். ராஜேஷ்குமாரின் வேட்பு மனு செல்லத்தக்கது என அறிவிக்கப்பட்டது. சுயேட்சை வேட்பாளரான ந. அக்னி ஸ்ரீராமசந்திரனின் வேட்பு
மனு நிராகரிக்கப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com