தமிழகத்தில் 1-8 வகுப்புகளுக்கு நவ.1 முதல் பள்ளிகள் திறப்பு: முதல்வர்

1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவது குறித்த முதல்வரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகியோரது கருத்துகளைக் கேட்ட பிறகு இந்த முடிவுக்கு வந்ததாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  வாரஇறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமுதாய அரசியல் கலாசார நிகழ்வுகள், திருவிழாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்

கடைகளில் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்ப நிலை கருவி கொண்டு பரிசோதிக்க வேண்டும்

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்க வேண்டும். சமூக இடைவெளியை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில் மக்கள் காத்திருக்கும்போது போதுமான இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com