சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்திப்பு

தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழக மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார். 

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 1:01 pm

DIN

தில்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை தமிழக மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சந்தித்தார். 
அப்போது தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அமைச்சரிடம் 6 கோரிக்கைகளை அவர் முன்வைத்தார். 
இதன்படி உக்ரைனில் இருந்து வந்த மாணவர்கள், போலந்து உள்ளிட்ட நாடுகளில் பயில வழிவகை செய்ய வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். 

கோவையில் புதிய எஸ்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அனுமதி வழங்க வேண்டும். ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.