சென்னை: போக்சோ சட்டப்பிரிவு வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் மேலும் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்ள பெண் காவல் அதிகாரிகளுக்கு 1 நாள் பயிற்சி முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் போக்சோ சட்டப்பிரிவுகளில் பதிவு செய்யப்படும் வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு மேற்கொள்ளவும், வழக்குகளில் தொய்வு ஏற்படாத வண்ணம் மேலும் திறம்பட புலனாய்வு மேற்கொள்ளவும், பெண் காவல் அதிகாரிகளுக்கு 1 நாள் பயிற்சி முகாமினை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இன்று காவல் ஆணையரகத்தில் துவக்கி வைத்தார்.
இப்பயிற்சி முகாமில், டி. லிங்கேஸ்வரன், இயக்குநர், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாதமி, ரிஷிகோஷல், துணை இயக்குநர், தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாதமி, ஆதிலஷ்மி லோகநாதன், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம், இ.வி. சந்துரு (எ) இ.சந்திரசேகரன், வழக்கறிஞர் உயர்நீதிமன்றம், ஆகியோர் கலந்து கொண்டு, போக்சோ சட்டப்பிரிவுகள் குறித்த விளக்கங்கள், விசாரணை அதிகாரிகள், போக்சோ சட்டப்பிரிவு வழக்குகளின்போது கடைபிடிக்க வேண்டிய நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்தும்,
நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து, புலனாய்வு மேற்கொள்ளுதல், கோப்புகள் கையாளுதல், பாதிக்கப்பட்ட சிறுமிகளை கையாளுதல், அவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல் உட்பட இவ்வழக்குகள் புலனாய்வு முறை குறித்து பயிற்சியினை அளித்து, காவல் அதிகாரிகள் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்க உள்ளனர்.
இம்முகாமில் சென்னை பெருநகர காவலில் உள்ள உதவி ஆணையாளர்கள், பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பாகிஸ்தானை பதம்பார்த்த இங்கிலாந்து.. 2-வது முறை சாம்பியன்! 2022 ரீவைண்ட்!!

1/8: புதிய பயிற்சியாளர் வந்தபிறகு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முதல் தோல்வி!

ஹாரி ப்ரூக்கின் விக்கெட்டை வீழ்த்தும் இந்தியாவின் திட்டம்; விவரிக்கும் புஜாரா!

தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!
வீடியோக்கள்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்...? | Producer Dhananjayan | TVK Vijay | Vijay Speech |
தினமணி வீடியோ செய்தி...

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

