மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தமிழகத்தில் கரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்: முகக்கவசம் கட்டாயம்

தமிழகத்தில் இதுவரை அமலில் இருந்த பெரும்பாலான கரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :3 ஏப்ரல் 2022, 4:46 pm

தமிழகத்தில் இதுவரை அமலில் இருந்த பெரும்பாலான கரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், தொற்றைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படுகின்றன.

மாநில அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியை 92 சதவிகிதமும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 75 சதவிகிதமும் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு சார்பில் விதிக்கப்பட்டிருந்த கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்பப்பெறப்படுகிறது.

எனினும் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் போன்றவற்றை கடைபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள் இதனைக் கடைபிடிப்பதை மாவட்ட துணை சுகாதாரத் துறை இயக்குநர்கள்,  சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர், உள்ளூர் சுகாதாரத் துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.