தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரத்தில் புதிய சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதல்வர்

விழுப்புரம் மாவட்டம் வானூா் ஒன்றியத்தில் உள்ள பெரியகொழுவாரி ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள  பெரியாா் நினைவு சமத்துவபுரத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

News image

விழுப்புரத்தில் புதிய சமத்துவப்புரத்தை திறந்து வைத்தார் முதல்வர்

Updated On :5 ஏப்ரல் 2022, 6:13 am

DIN

விழுப்புரம் மாவட்டம், கொழுவாரியில், ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று (5.4.2022) விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கொழுவாரி ஊராட்சியில் 2 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை திறந்து வைத்து, சமத்துவபுர வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலையினையும் திறந்து வைத்தார்.

அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பெயரில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட உன்னதத் திட்டம் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டமாகும்.

இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. ஐந்தாவது சமத்துவபுரமாக 2010-2011ஆம் நிதியாண்டில் கொழுவாரி ஊராட்சியில் சமத்துவபுரம் கட்டப்பட்டு திறக்கும் நிலையில் ஆட்சி மாற்றத்தால் திறக்கப்படாமல் இருந்தது. இந்த சமத்துவபுரம் கொழுவாரி கிராமத்தில் 7.00 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இச்சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் பரப்பளவு 249 சதுர அடி, தலா ஒரு வீட்டின் மதிப்பு 1.92 இலட்சம் என மொத்தம் 100 வீடுகள் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் தந்தை பெரியாரின் மார்பளவு திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

Story image

தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பாக ரு.14.20 இலட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் இதர குடிநீர் திட்டப் பணிகள் ரூ.7.59 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறுவர், சிறுமியர் விளையாடும் வகையில் ரூ.7.32 இலட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, கைப்பந்து, மற்றும் கபடி மைதானம் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கலைஞர் விளையாட்டுத்திடல் மற்றும் கலைஞர் விளையாட்டுப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தெருக்களில் ரூ.3.42 மதிப்பீட்டில் மின்விளக்குகள், ரூ.7.64 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் வசதிகள், அனைத்து தெருக்களிலும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர், அவ்வளாகத்தில் ரூ.2.75 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்து, ரூ.10.19 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையக் கட்டடம் மற்றும் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நூலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.