இதன் தொடர்ச்சியாக, திருவல்லிக்கேணி சரக உதவி ஆணையாளர் எம்எஸ் பாஸ்கர் தலைமையிலான காவல் குழுவினர் இன்று (06.04.2022) காலை, மாநிலக்கல்லூரிக்கு சென்று மாணவர்களிடம் படிக்கட்டில் பயணம் செய்வதால் உயிரிழப்பு, கை, கால் அடிப்பட்டு உடல் ஊனம் உள்ளிட்ட ஆபத்துகள் நிகழக்கூடும் எனவும், எனவே இது போன்று பேருந்து படியில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்வதும், ஓடிச் சென்று ஏறுவது போன்ற சாகசங்கள் செய்வதும் ஆபத்தை விளைவிக்கும் எனவும், இந்தியாவின் எதிர்கால தலைமுறையாகிய மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தி, முன்னேற வேண்டும் எனவு காவல் குழுவினர் அறிவரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.