நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இலங்கைத் தமிழர்களுக்கு உதவுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

News image

முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :7 ஏப்ரல் 2022, 11:35 am

DIN

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவ வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள தமிழர்களும் பாதிக்கப்படுவதால் தமிழகத்திலிருந்து அரிசி, பருப்பு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் பொருள்களை விநியோகிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் ஜெய்சங்கரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.