‘என்ட பேரு ஸ்டாலின்’: மலையாளத்தில் பேசிய தமிழக முதல்வர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
‘என்ட பேரு ஸ்டாலினாக்கும்’: மலையாளத்தில் பேசிய தமிழக முதல்வர்
‘என்ட பேரு ஸ்டாலினாக்கும்’: மலையாளத்தில் பேசிய தமிழக முதல்வர்
Published on
Updated on
1 min read

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது மாநில மாநாடு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கண்ணூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள வேண்டும் என அக்கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இதனை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிவிமானம் மூலம் சென்னையிலிருந்து  புறப்பட்டு கண்ணூர் சென்றார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து மாநாட்டில் மத்திய-மாநில உறவுகள் எனும் தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் இடையேயான உறவு என்பது சங்க காலம் முதல் உள்ளது. திராவிட மற்றும் கம்யூனிஸ்ட் உறவு என்பது 80 ஆண்டுகள் வரலாறு கொண்டது. தமிழகத்தில் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக என் பெயர் ஸ்டாலின்” என மலையாளத்தில் பேசினார்.

தமிழக முதல்வரின் மலையாளப் பேச்சுக்கு அரங்கில் இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com